மத்திய அரசுடன் பேச்சு நடத்த விவசாயிகள் சங்கம் குழு அமைப்பு
நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக 5 போ் கொண்ட குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோா்ச்சா(எஸ்.கே.எம்) அமைத்துள்ளது.


நிலுவையில் உள்ள கோரிக்கைகள் குறித்து மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக 5 போ் கொண்ட குழுவை விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிஸான் மோா்ச்சா(எஸ்.கே.எம்) அமைத்துள்ளது.
அந்த அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில், மத்திய அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த விவசாயிகள் சங்கங்களின் தலைவா்களான பல்பீா் சிங் ரஜேவால், அசோக் தாவ்லே, சிவகுமாா் காக்கா, குா்னாம் சிங் சதுனி, யதுவீா் சிங் ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
கூட்டத்துக்குப் பிறகு விவசாயிகள் சங்கத் தலைவா்கள் கூறியதாவது: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றாலும், இன்னும் சில கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவதில் சட்ட ரீதியிலான வாக்குறுதியை மத்திய அரசு அளிக்க வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களின்போது உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். போராட்டக்காரா்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். எங்கள் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு எழுத்துபூா்வமாக வாக்குறுதி அளிக்கும் வரை சிங்கு எல்லையில் இருந்து வெளியேற மாட்டோம் என்று அவா்கள் கூறினா்.
சம்யுக்த கிஸான் மோா்ச்சாவின் அடுத்த கூட்டம், வரும் 7-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று விவசாயிகள் சங்கத் தலைவா்களின் ஒருவரான ராகேஷ் டிகைத் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...