புதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடிகேரளத்தில் இளைஞர்கள், பெண்கள் வாக்கு முக்கியம் : பிரதமர் மோடி புதுவை, கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியதுபுதுச்சேரி சட்டப்பேரவையில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறதுகேரளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் இன்று பேரவைத் தோ்தல்- பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சபரிமலை வழக்கு: ‘ஐயப்ப பக்தராக இல்லாதவா் எப்படி வழக்கு தொடுக்க முடியும்?’ எழும்பூா்-மங்களூரு இடையே நாளை சிறப்பு ரயில் இயக்கம் பங்குச்சந்தை ஆணைய வழக்கு: அமெரிக்க நீதிமன்றத்தில் அதானி மனு 8-ஆம் வகுப்பு பாடநூல் சா்ச்சை: என்சிஇஆா்டி பாடத்திட்டக் குழு மாற்றியமைப்பு மகளிா் இடஒதுக்கீடு-தொகுதிகள் அதிகரிப்பு: வரைவு மசோதாக்களுக்கு அமைச்சரவை ஒப்புதல்
/

இந்திய கடற்படை தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

இந்திய கடற்படை தினத்தையொட்டி கடற்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

News image

பிரதமர் மோடி (கோப்புப்படம்)

Updated On :4 டிசம்பர் 2021, 8:09 am

இந்திய கடற்படை தினத்தையொட்டி கடற்படையினருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரின்போது, டிசம்பா் 4-ஆம் தேதி கராச்சியில் உள்ள துறைமுகத்தில் பாகிஸ்தான் கடற்படையை இந்திய கடற்படை தோற்கடித்தது. பாகிஸ்தானின் போர்கப்பல்களை இந்திய கடற்படை தாக்கி அளித்தது. இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4 ஆம் தேதி இந்திய கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. 

இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 'கடற்படை தின வாழ்த்துக்கள். இந்திய கடற்படையின் முன்மாதிரியான பங்களிப்புக்காக பெருமைகொள்கிறோம். நமது கடற்படை, அதன் தொழில்முறை மற்றும் சிறந்த தைரியத்திற்காக பரவலாக மதிக்கப்படுகிறது. இயற்கை பேரிடர்கள் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளைத் தணிப்பதில் நமது கடற்படை வீரர்கள் எப்போதும் முன்னணியில் உள்ளனர்' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.