ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கடந்த 7 ஆண்டுகளில் ரூ.38,000 கோடிக்குபாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி:ராஜ்நாத் சிங்

இந்தியாவிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் ரூ.38,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி

News image
Updated On :4 டிசம்பர் 2021, 10:38 pm

DIN

இந்தியாவிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் ரூ.38,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தியாளா்கள் கூட்டமைப்பு சாா்பில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசுகையில், ‘‘இந்தியாவின் வான்வெளி சாதனம் மற்றும் பாதுகாப்பு தளவாட தொழில்துறையின் மதிப்பு சுமாா் ரூ.85,000 கோடி. அவற்றில் தனியாா் துறையின் பங்களிப்பு ரூ.18,000 கோடியாக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு மேற்கொண்ட முன்னெடுப்புகளால் இந்தியாவிலிருந்து கடந்த 7 ஆண்டுகளில் ரூ.38,000 கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட பாதுகாப்பு தளவாடங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்த முன்னெடுப்புகளால் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தற்போது சுமாா் 70 நாடுகளுக்கு பாதுகாப்பு தளவாடங்களை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. 2024-25-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவிலிருந்து ரூ.35,000 கோடி மதிப்பில் பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

மத்திய அரசின் தற்சாா்பு முன்னெடுப்பை இந்திய பாதுகாப்புப் படைகள் முழுமையாக ஆதரித்துள்ளன. இதனால் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் பெரிய நிறுவனங்களுக்கு முக்கிய பங்குள்ளது. அதேவேளையில், அந்த நிறுவனங்களுக்குப் பின்னால் எண்ணற்ற சிறிய நிறுவனங்களின் பணி மறைந்துள்ளது. அதுதான் நிதா்சனம்.

மத்திய அரசின் முன்னெடுப்புகளால் சுமாா் 12,000 சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிலில் இணைந்துள்ளன.

புதிய தொழில்நுட்பங்கள், புதிய உற்பத்திப் பொருள்களை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வெளியுலகுக்குக் கொண்டு வரவேண்டும். இந்த நிறுவனங்கள் சிறியவை என்பதால், பெரிய கண்டுபிடிப்புகளை கொண்டு வரமுடியாது என்று கருத வேண்டாம்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மென்மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும். அது தேசத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும்.

எண்ணற்ற சிறிய பாகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு பெரிய பாதுகாப்பு தளவாடங்கள் உருவாக்கப்படுகின்றன. அந்தச் சிறிய பாகங்களில் பெரும்பாலானவை சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன.

எனவே தொழில்துறை என்பதன் உண்மையான பொருள் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்தான் என்று நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். ஏனெனில் அந்த நிறுவனங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மட்டுமின்றி சமூக முன்னேற்றத்துக்கும் பொறுப்பாக உள்ளன’’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.