காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பிகாரில் கரோனா சோதனை, தடுப்பூசி செலுத்திக் கொண்ட மோடி, அமித் ஷா, சோனியா, பிரியங்கா சோப்ரா?

பிகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதா நிலையத்தில், மோடி, அமித் ஷா,  சோனியா உள்ளிட்டோர் கரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.

News image
பிகாரில் கரோனா சோதனை, தடுப்பூசி செலுத்திக் கொண்ட மோடி, அமித் ஷா, சோனியா, பிரியங்கா சோப்ரா?
Updated On :7 டிசம்பர் 2021, 9:10 am

DIN


பாட்னா: பிகார் மாநிலம் அர்வால் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதா நிலையத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, நடிகை பிரியங்கா சோப்ரா உள்ளிட்டோர் கரோனா பரிசோதனை செய்து கொண்டதுடன், கரோனா தடுப்பூசியும் செலுத்திக் கொண்டனர்!

என்ன ஆச்சரியமாக உள்ளதா? ஆச்சரியம் வேண்டாம். இது உண்மையல்ல. பிகார் மாநிலத்தின் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்து கொண்டவர்களின் பட்டியலில்தான், இந்த முக்கிய பிரமுகர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்த சம்பவம் குறித்து அர்வால் மாவட்ட நீதிபதி, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற தவறில் ஈடுபட்ட நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இது மட்டுமல்ல, இதர ஆரம்ப சுகாதார நிலையங்களில் பதிவான பயனாளர்களின் பட்டியலையும் சரிபார்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

போதிய பயனாளர்கள் இல்லாததால், தோராயமாக சிலரின் பெயர்களைப் பதிவு செய்து, முகவரியை இணைக்குமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்களை கட்டாயப்படுத்தியதால்தான் இவ்வாறு செய்ததாக கடைநிலை ஊழியர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.