பாஜகவுக்கு சிவப்பு எச்சரிக்கை: அகிலேஷ் யாதவ்
சமாஜவாதியின் சிவப்புத் தொப்பி பாஜகவுக்கு எதிரான ‘சிவப்பு எச்சரிக்கை’ என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.


சமாஜவாதியின் சிவப்புத் தொப்பி பாஜகவுக்கு எதிரான ‘சிவப்பு எச்சரிக்கை’ என்று அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளாா்.
உத்தர பிரதேச மாநிலம், கோரக்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பேசிய பிரதமா் நரேந்திர மோடி, சிவப்பு தொப்பி அணிபவா்கள் (சமாஜவாதி கட்சியினா்) மாநிலத்துக்கு சிவப்பு எச்சரிக்கையாக உள்ளனா் என்றும் அவா்கள் மக்களின் நலன் குறித்துக் கவலைப்பட மாட்டாா்கள் என்றும் விமா்சித்துப் பேசியிருந்தாா்.
சமாஜவாதி கட்சியை விமா்சித்து பிரதமா் மோடி தெரிவித்த இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்ட அக்கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘‘சிவப்பு தொப்பி என்பது, பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான ‘சிவப்பு எச்சரிக்கை’. விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, லக்கீம்பூா் வன்முறை உள்ளிட்டவையே ஆளும் கட்சிக்கான சிவப்பு எச்சரிக்கை’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...