காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மூத்த அமைச்சர்களுடன் மோடி ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

News image
நரேந்திர மோடி (கோப்புப் படம்)
Updated On :8 டிசம்பர் 2021, 5:33 am

DIN

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை முன்னிட்டு மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.

மாநிலங்களவையிலிருந்து எதிர்க்கட்சி எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யப்பட்டதால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலங்களவை செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள் உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பிரஹலாத் ஜோஷி, நிர்மலா சீத்தராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.