பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஒமைக்ரான்: ராஜஸ்தானில் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்தனர்

​ராஜஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :9 டிசம்பர் 2021, 5:31 pm

DIN


ராஜஸ்தானில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாக அந்த மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவிலிருந்து ராஜஸ்தான் திரும்பிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கடந்த 5-ம் தேதி கண்டறியப்பட்டது.

அவர்களுடன் தொடர்பிலிருந்த 5 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.

இந்த நிலையில், ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 9 பேருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது இரண்டு முடிவுகளிலும் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக ராஜஸ்தான் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் வீடு திரும்பிவிட்டதாகவும், வீட்டுத் தனிமையில் 7 நாள்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.