தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

உத்தரகண்ட்: பல்கலைக்கழகத்திற்கு விபின் ராவத்தின் பெயரைச் சூட்ட முடிவு

மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

News image

விபின் ராவத்

Updated On :10 டிசம்பர் 2021, 11:33 am

மறைந்த முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத்தின் பெயரை உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பல்கலைக்கழகத்திற்கு சூட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மற்றும் அவர் மனைவி உள்பட 13 பேர் ஹெலிகாப்டர் விபத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர். 

அவருடைய மறைவுக்கு  அரசியல் கட்சித் தலைவர்கள் , முன்னாள் அதிகாரிகள் என பலர் இரங்கல் தெரித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவர் பிறந்த மாநிலமான உத்தரகண்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என தேவப்பிரயாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்டூரி நேற்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று அதனை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரித்து ஏற்றுக்கொண்டதால் விபின் ராவத்தின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்ட அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.