தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

கேரளத்தில் முதல் நபருக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கேரளத்தில் முதன்முதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :12 டிசம்பர் 2021, 4:30 pm

கேரளத்தில் முதன்முதலாக ஒருவருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் கூறுகையில், "கொச்சியில் ஒமைக்ரான் தொற்று முதன்முதலாக ஒருவருக்கு பதிவாகியுள்ளது. சம்பந்தப்பட்ட நபர் டிசம்பர் 6 ஆம் தேதி இங்கிலாந்தில் இருந்து கொச்சிக்கு திரும்பினார். டிசம்பர் 8 ஆம் தேதி அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் நடைபெற்ற ஒமைக்ரான் பரிசோதனையில் அவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. பதற்றமடைய தேவையில்லை. அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவரது மனைவி மற்றும் தாயாருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
இருவரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நாங்கள் அனைத்துவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
இந்தியாவில் இதுவரை மகாராஷ்டிரம்-18, ராஜஸ்தான் 9, தில்லி 2, குஜராத் 3, ஆந்திரம் 1, சண்டீகர் 1, கர்நாடகம் 3 கேரளம் 1 என மொத்தம் 38 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.