ரயில் டிக்கெட் எடுக்க சமஸ்கிருதம் தெரிய வேண்டுமா? என சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘ ஐ.ஆர்.சி.டி.சி ரயில் பயணச் சீட்டு முன் பதிவுக்குள் போனால் ஜெனரல், லேடீஸ், லோயர் பெர்த்/ சீனியர் சிட்டிசன், டட்கல் என்ற தெரிவுகள் இருக்கும். திவ்யாங் என்று ஒரு தெரிவு இருக்கும்.
திவ்யாங் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு தெய்வீக உறுப்பு கொண்டவர் என்று தமிழில் பொருளாம். மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதமர் வைத்த பெயர் அது. அதிகாரிகளின் விசுவாசமோ என்னவோ ஐ.ஆர்.சி.டி.சி முன் பதிவில் அதை சொருகி விட்டார்கள். இந்தியாவில் சமஸ்கிருதத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் 14,135 பேர்தான். தமிழ் 8 கோடி பேரின் தாய் மொழி.
மத்திய அரசும், அதன் அதிகாரிகளும் நினைத்தால் 14,000 பேரின் தாய் மொழியை புரிகிறதா புரியாதா என்று கூட யோசிக்காமல் திணிக்க முடியும். ஆனால் இவ்வளவு தொழில் நுட்ப மேம்பாடு இருந்தாலும் 8 கோடி பேரின் தாய் மொழியை முன் பதிவுக்கான தெரிவு மொழியில் இணைக்க முடியாது.
ஆங்கிலமே திணற அடிக்கும் போது அறவே புரியாத மொழியை எல்லாம் திணிப்பதை கைவிடுங்கள். வார்த்தைகளில் புனிதம் இருந்தால் போதாது. நோக்கம் புனிதமாக இருக்க வேண்டும்.’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்த 3 மணி நேரத்துக்கு 19 மாவட்டங்களில் மழை!

புல்வாமா தாக்குதல் நடத்திய பயங்கரவாதி மர்ம மரணம்!
வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

நரசிம்மர் ஜெயந்தி: பூவரசன்குப்பம்லட்சுமி நரசிம்மர் கோயிலில் சிறப்பு வழிபாடு!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

