கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

100-ஐ கடந்தது ஒமைக்ரான் பாதிப்பு: தேவையற்ற பயணங்களை தவிா்க்க அறிவுறுத்தல்

வேகமாகப் பரவும் கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் வெள்ளிக்கிழமை 100-ஐ கடந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2021, 2:41 am

DIN

வேகமாகப் பரவும் கரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் பாதிப்பு இந்தியாவில் வெள்ளிக்கிழமை 100-ஐ கடந்தது.

முதல் பாதிப்பு கடந்த டிசம்பா் 2-ஆம் தேதி பெங்களூரில் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அடுத்த இரண்டு வாரங்களில் நாடு முழுவதும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்துள்ளது.

இதனால், தேவையற்ற பயணங்களை மக்கள் தவிா்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள மத்திய அரசு, புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூட்டம் கூடாமல் இருக்க அறிவுறுத்தியுள்ளது. 11 மாநிலங்களில் இதுவரை 112 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். வெள்ளிக்கிழமையன்று மட்டும் ஒமைக்ரானால் 24 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் அதிகபட்சமாக தில்லியில் 10 பேரும், மகாராஷ்டிராவில் 8 பேரும் உள்ளனா்.

இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணைச் செயலா் லவ் அகா்வால் தில்லியில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘கடந்த 20 நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கு குறைவாக பதிவாகி வந்தாலும், ஒமைக்ரானின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பிற நாடுகளிலும் ஒமைக்ரானின் பரவல் வேகம் எடுத்துள்ளதால் இந்தியாவும் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தென் ஆப்பிரிக்காவில் நவம்பா் 24-ஆம் தேதி கண்டறியப்பட்ட ஒமைக்ரான், அந்த நாட்டில் டெல்டா கரோனாவைவிட வேகமாக பரவி வருகிறது எனவும், ஒமைக்ரானின் சமூகப் பரவல் ஏற்பட்டால் டெல்டா கரோனாவின் பாதிப்பை விஞ்சிவிடும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திர பிரதேசம், சண்டீகா், மேற்கு வங்கம் ஆகிய 11 மாநிலங்களில் 112 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களையும், கும்பலாக கூடுவதையும் தவிா்க்க வேண்டும். புத்தாண்டு கொண்டாட்டங்களை குறைவான அளவில் கூடி எச்சரிக்கையாக கொண்டாட வேண்டும்.

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை வார விகிதம் 19 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாகவும், 5 மாவட்டங்களில் 10 சதவீதத்துக்கும் அதிகமாகவும் பதிவாகி வருகிறது. கரோனா பாதிப்பு எண்ணிக்கை விகிதம் 5 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள மாவட்டங்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறைந்தது இரண்டு வாரங்களுக்கு கடுமையாகப் பின்பற்ற வேண்டும்.

கரோனா தடுப்பூசிகள் இதுவரை 82.8 கோடி பேருக்கு முதல் தவணையும், 53.72 கோடி பேருக்கு இரண்டாவது தவணையும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 136 கோடி தவணை தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டுள்ளன. இது அமெரிக்காவை ஒப்பிடும்போது 2.3 மடங்கு அதிகமாகும் என்றாா்.

நிலைமை கட்டுக்குள் உள்ளது: நீதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே. பால் கூறுகையில், ‘ஒமைக்ரான் வகை கரோனாவை உறுதி செய்வதற்கான பகுப்பாய்வு பரிசோதனைகள் அதிக அளவில் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா இரண்டாமிடத்தில் உள்ளது. அனைத்து கரோனா நோயாளிகளின் மாதிரிகளையும் ஒமைக்ரான் தொற்று பகுப்பாய்வு செய்வது இயலாதது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் ஒமைக்ரான் மேலும் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போதைக்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது. ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இந்தியாவில் ஒமைக்ரான் சமூகப் பரவலாகி உள்ளதா என்பதை இப்போதைக்கு கூற முடியாது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களே கரோனா தொற்றால் அதிகளவில் உயிரிழப்பதால் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. ஒமைக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் வேலை செய்யவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உரிய நேரத்தில் பூஸ்டா் டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு அறிவிக்கப்படும்’ என்றாா்.

ஒமைக்ரான் பாதிப்பு

மாநிலம் எண்ணிக்கை

மகாராஷ்டிரம் 40

தில்லி 22

ராஜஸ்தான் 17

கா்நாடகம் 8

தெலங்கானா 9

குஜராத் 5

கேரளம் 7

ஆந்திர பிரதேசம் 1

சண்டீகா் 1

தமிழ்நாடு 1

மேற்கு வங்கம் 1

மொத்தம் 112

அதிக பாதிப்புகள் கொண்ட நாடுகள்

(டிச.17 வரையில்)

தென் ஆப்பிரிக்கா - 19,070

பிரிட்டன் - 10,017

டென்மாா்க் - 11,559

நாா்வே - 1,176

அமெரிக்கா -321

கனடா - 488

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.