பாலியல் வல்லுறவு குறித்து சர்ச்சை கருத்து; மன்னிப்பு கேட்ட எம்எல்ஏ

கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்னை குறித்து நடைபெற்ற விவாதத்தின் போது, பாலியல் வல்லுறவு குறித்து எம்எல்ஏ ஒருவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் குமார்
காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் குமார்

கர்நாடக சட்டப்பேரவையில் விவசாயிகள் பிரச்னைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, அனைவருக்கும் நேரம் ஒதுக்கினால் அவையை எப்படி நடத்த முடியும் என சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரி கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் பேசிய அவர், "நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நான் உடன்படுவேன். இந்த சூழலை நம் அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். என்னால் அமைப்பை கட்டுப்படுத்தவோ சீர்திருத்தவோ முடியாது. அவையை நடத்துவதே எனது கவலையாக உள்ளது" என்றார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஆர். ரமேஷ் குமார், "பாலியல் வல்லுறவு என்பது தவிர்க்க முடியாதது. எனவே, படுத்துவிட்டு மிகிழ்ச்சி அடைந்து கொள்ளுங்கள் என்ற பழமொழி உள்ளது. இந்த சூழ்நிலையில் தான், நீங்கள் இருக்கீறிர்கள்" என்றார். அதிர்ச்சியூட்டும் விதமாக, இந்த கருத்தை கேட்டு கொண்டிருந்த மற்ற எம்எல்ஏக்களும் வாய் விட்டு சிரித்தனர்.

இதையடுத்து, இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதை கடுமையாக விமரிசித்த பாஜக மூத்த தலைவர் எஸ். பிரகாஷ், "இந்த கருத்து அருவருப்பானது. முற்றிலும் அவமானகரமானது. இம்மாதிரியான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வரும் இவர், சட்டப்பேரவை சபாநாயகராக இருந்த போது, ​​இதே கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது அதை மீண்டும் செய்துள்ளார். பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுத்து வருவதாகக் கூறி வரும் காங்கிரஸ், இந்த தொடர் குற்றவாளி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தான் தெரிவித்த கருத்துக்கு ரமேஷ் குமார் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் இன்று பேசிய அவர், "எனது கருத்து பெண்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், மன்னிப்பு கேட்பதில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. நான் என் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கிறேன்" என்றார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் விஸ்வேஷ்வர், "அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார். இந்த பிரச்னையை மேலும் எடுத்த செல்ல வேண்டாம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com