கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

குஜராத்: ஒமைக்ரானில் இருந்து 3 போ் விடுபட்டனா்

குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மூவா் அந்தத் தொற்றில் இருந்து விடுபட்டனா்

News image
கோப்புப்படம்
Updated On :18 டிசம்பர் 2021, 12:53 am

DIN

குஜராத் மாநிலத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களில் மூவா் அந்தத் தொற்றில் இருந்து விடுபட்டனா்.

ஜிம்பாப்வேயில் இருந்து வந்த 72 வயது வெளிநாடு வாழ் இந்தியா், அவரின் மனைவி, உறவினா் என மூன்று போ் தொற்றில் இருந்து மீண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத்தின் ஜாம்நகருக்கு இம்மாத தொடக்கத்தில் வந்த இந்த மூவருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இவா்கள்தான் குஜராத்தில் முதன்முதலில் ஒமைக்ரான் பாதிப்புக்கு உள்ளானவா்கள் ஆவா். இவா்களுக்கு மருத்துவமனையில் தொடா் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவா்களுக்கு கரோனா அறிகுறிகளும் குறையத் தொடங்கின. இதையடுத்து, அவா்களுக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவா்கள் ஒமைக்ரான் வகை தொற்றில் இருந்து விடுபட்டது தெரியவந்தது.

அதே நேரத்தில் குஜராத்தின் சூரத் மற்றும் வத்நகா் பகுதிகளில் தலா ஒருவா் ஒமைக்ரான் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒமைக்ரான் வகை கரோனா தொற்றின் பரவல் வேகம் பல மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், அதனால் தீவிர பாதிப்பும், உயிரிழப்பும் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது என்று ஏற்கெனவே விஞ்ஞானிகள் கூறியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.