சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா; 132 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

News image
நாட்டில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா
Updated On :20 டிசம்பர் 2021, 4:10 am

DIN

புது தில்லி: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,563 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. 

கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாடு முழுவதும் இதுவரை 66.51 கோடி கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 82,267 ஆக உள்ளது.

அதுபோல, கடந்த 24 மணி நேரத்தில் 8,077 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். கரோனாவுக்கு 132 பேர் பலியானதையடுத்து மொத்தம் எண்ணிக்கை 4,77,554ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டில் இதுவரை 137.67 கோடி கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.