100% தடுப்பூசி இலக்கை எட்டும் பெங்களூரு நகரம்!
பெங்களூரு நகரம் விரைவில் 100% தடுப்பூசி இலக்கை எட்டவுள்ளதாக பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆணையர் தெரிவித்தார்.


பெங்களூரு நகரம் விரைவில் 100% தடுப்பூசி இலக்கை எட்டவுள்ளதாக பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆணையர் தெரிவித்தார்.
மேலும் ஒமைக்ரான் பரவல் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பெங்களூரு நகர்ப்புற மாவட்ட ஆணையர் ஜே. மஞ்சுநாத், 'ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. ஆனால் அது மிகவும் ஆபத்தானது என்று கூறிவிட முடியாது. எனினும், கரோனா சோதனைகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. எனவே மக்கள் பதட்டமடையத் தேவையில்லை.
இன்னும் ஓரிரு நாட்களில் பெங்களூரு நகர்ப்புற மாவட்டம் 100 சதவீத தடுப்பூசி சாதனையை அடையப் போகிறது' என்றார்.
இதற்கிடையில், ஒமைக்ரான் மாறுபாட்டைக் கருத்தில் கொண்டு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செவ்வாய்க்கிழமை, பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
'உணவகங்கள் மற்றும் கிளப்புகளில் 50 சதவீத இருக்கைகளுடன் கொண்டாட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கலந்துகொள்பவர்கள் கண்டிப்பாக முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கொண்டாட்டங்களில் சிறப்பு நிகழ்வுகள், டிஜே ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. இந்த கட்டுப்பாடுகள் டிசம்பர் 30 முதல் ஜனவரி 2 வரை அமலில் இருக்கும்' என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...