ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தடுப்பூசி முகாமில் ம.பி. முதல்வர் திடீர் ஆய்வு

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி முகாம்களில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

News image
சிவராஜ் சிங் செளகான் (கோப்புப் படம்)
Updated On :22 டிசம்பர் 2021, 10:51 am

DIN

மத்தியப் பிரதேசத்தில் தடுப்பூசி முகாம்களில் முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 

கரோனாவின் புதியவகையான ஒமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் பரவி வரும் நிலையில், அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார். 

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வகை தொற்று, வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மூலம் இந்தியாவில் பரவி வருகிறது.

இதனைத் தடுக்க இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, விமான நிலையங்களில் பரிசோதனைகளை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

அனைத்து மாநிலங்களும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவுறுத்தியது. 

இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் போபாபில் தடுப்பூசி முகாம்களை முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேரில் சென்று பார்வையிட்டார். 

பின்னர் பொதுமக்களிடம் உரையாடிய அவர், தற்போது வரை மாநிலத்தில் 9.91 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும். குறிப்பாக முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், இரண்டாம் தவணை தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.