கேரளத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான்
கேரளத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.


கேரளத்தில் மேலும் 9 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
"9 பேரில் 6 பேர் கொச்சி வந்தபோது விமான நிலையத்தில் வைத்து தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுடன் எவரும் தொடர்பில் இல்லை.
கொச்சியில் உறுதி செய்யப்பட்டவர்களில் இருவர் பிரிட்டனிலிருந்துத் திரும்பியவர்கள். இருவர் தன்சானியாவிலிருந்து வந்தவர்கள்.
மற்றொரு பெண் கானாவிலிருந்தும் மேலும் ஒரு பெண் அயர்லாந்திலிருந்தும் திரும்பியவர்கள்.
மற்றொருவர் பிரிட்டனிலிருந்து திருவனந்தபுரம் திரும்பியபோது அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மற்ற இருவர் டிசம்பர் 10-ம் தேதி நைஜீரியாவிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு பின்னர்தான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. அவர்களது இரண்டு குழந்தைகளே அவர்களுடன் முதன்மையாகத் தொடர்பிலிருந்தவர்கள்" என்றார் வீணா ஜார்ஜ்.
இதைத் தொடர்ந்து, கேரளத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...