கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கோவா: முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இங்கிலாந்தில் இருந்து கோவா திரும்பிய 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று

News image

கோவா: முதல் ஒமைக்ரான் தொற்று உறுதி

Updated On :27 டிசம்பர் 2021, 9:38 am

கோவாவில் முதல் ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் பாதித்தவர்களின் தினசரி எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இங்கிலாந்தில் இருந்து கோவா திரும்பிய 8 வயது சிறுவனுக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஸ்வஜித் ரானே தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 578ஆக(காலை நிலவரப்படி) அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக தில்லி 142, மகாராஷ்டிரம் 141, கேரளம் 57, குஜராத் 49, ராஜஸ்தான் 43, தெலங்கானா 41, தமிழ்நாடு 34, கர்நாடகம் 31 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அதேசமயம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட 578 பேரில் 151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஒமைக்ரான் தொற்று தற்போது தில்லி, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கா்நாடகம், தெலங்கானா, குஜராத், கேரளம், ஆந்திரம், சண்டீகா், மேற்கு வங்கம் உள்பட 19 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.