தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

டெல்டாவுக்கு மாற்றாக பரவத் தொடங்கிய ஒமைக்ரான்?

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :31 டிசம்பர் 2021, 10:42 am

இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கரோனாவின் புதிய வகையான ஒமைக்ரான் தற்போது பல்வேறு நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு 1,270-யை எட்டியுள்ளது. 

இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு வகையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்தியாவில் டெல்டா வகை கரோனாவின் இடத்தை தற்போது ஒமைக்ரான் பிடித்துள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. 

அதாவது பரவும் வேகம், தற்போது உறுதி செய்யப்பட்ட எண்ணிக்கையைக் கொண்டு இந்தியாவில் டெல்டாவுக்கு மாற்றாக ஒமைக்ரான் பரவத் தொடங்கியிருப்பதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.