பாஜகவால் ஊழல்வாதிகளை மட்டுமே விலைக்கு வாங்க முடியும்: மம்தா
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாஜக அரசு மக்களை அச்சுறுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
தேசிய குடிமக்கள் பதிவேடு என்ற பெயரில் பாஜக அரசு மக்களை அச்சுறுத்துவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, மேற்கு வங்க மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது. மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி.-யை செயல்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று கூறினார்.
பாஜகவால் ஊழலில் மூழ்கிய தலைவர்களை மட்டுமே விலைக்கு வாங்க முடியும். ஆனால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்தவர்களை பாஜகவால் விலைக்கு வாங்க முடியாது.
திரிணமூல் கட்சியிலிருந்து விலக விரும்புபவர்கள் விரைவில் விலகிக்கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...