எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

செங்கோட்டையில் கொடியேற்றிவர்: தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு

தில்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.

News image
காவல்துறையால் தேடப்பட்டு வரும் தீப் சித்து
Updated On :3 பிப்ரவரி 2021, 8:29 am

DIN

தில்லி வன்முறைக்கு முக்கிய காரணமான தீப் சித்து குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.

குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியின்போது செங்கோட்டையில் கொடியேற்றிய பஞ்சாபை சேர்ந்த தீப் சித்துவை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தீப் சித்துவுடன் தில்லி கலவரத்திற்கு காரணமான ஜுக்ராஜ் சிங், குர்ஜோத் சிங், குர்ஜாந்த் சிங் உள்ளிட்ட மூவர் குறித்தும் தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை பரிசு அறிவித்துள்ளது.

மேலும் வன்முறையில் ஈடுபட்ட ஜெய்பீர் சிங், புட்டா சிங், சுக்தேவ் சிங், இக்பால் சிங் ஆகியோர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும் தில்லி காவல்துறை அறிவித்துள்ளது.

காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் தீப் சித்து, வேளாண் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்திற்கும் எனக்கும் தொடபில்லை என்று விடியோ வெளியிட்டது சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து அவரைக் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு காவல்துறை சன்மானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.