சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

செங்கோட்டை வன்முறை: உரிய நடவடிக்கை எடுக்க குலாம்நபி ஆசாத் வலியுறுத்தல்

குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

News image
காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத்
Updated On :3 பிப்ரவரி 2021, 10:49 am

DIN

குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குலாம்நபி ஆசாத் வலியுறுத்தியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் குடியரசுத் தினத்தன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதன் ஒருபகுதியாக செங்கோட்டைக்குள் நுழைந்தவர்கள் மதக்கொடியை ஏற்றினர். இது பலத்த சர்ச்சையைக் கிளப்பியது.

இந்நிலையில் புதன்கிழமை மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம்நபி ஆசாத், “செங்கோட்டையில் இந்த மாதிரியான சம்பவங்கள் நடக்கக் கூடாது. இது ஜனநாயகத்திற்கும் சட்டம் ஒழுங்குக்கும் எதிரானது” எனத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், “இந்த சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், அப்பாவி வேளாண் தலைவர்களை பொய்யான வழக்குகளில் சிக்க வைக்க எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது”  என்று தெரிவித்தார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று ஆசாத் அறிவுறுத்தியதுடன் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் உள்ளிட்டவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.