தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

7 பேர் விடுதலை வழக்கு: பிப். 9-ல் உச்சநீதிமன்றம் விசாரணை

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

News image

7 பேர் விடுதலை வழக்கு: பிப். 9-ல் உச்சநீதிமன்றம் விசாரணை (கோப்புப்படம்)

Updated On :4 பிப்ரவரி 2021, 7:54 am

DIN

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை தொடர்பான வழக்கு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநர் 3 நாள்களுக்குள் முடிவெடுப்பார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், அவர் எந்த முடிவும் எடுக்காததால், உச்சநீதிமன்றத்திற்கு மீண்டும் வழக்கு சென்றுள்ளது.

பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேர் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுதலை செய்ய அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் கோரிக்கை வைத்து வருகின்றன.

அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 2018-ஆம் ஆண்டு  செப்டம்பரில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் இந்த தீர்மானம் மீது ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனையடுத்து விடுதலை தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக 3 அல்லது 4 நாள்களுக்குள் ஆளுநர் தமது முடிவை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரத்திற்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இதனிடையே இது தொடர்பாக ஆளுநர் எந்தவித முடிவும் எடுக்காததால், வரும் வெள்ளிக் கிழமையுடன் வழக்கு ஒத்திவைப்பு கால அவகாசம் முடிவடையவுள்ளதால் பிப்ரவர 9-ஆம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.