கரோனா தடுப்பூசி மூன்றாம் கட்டம் மார்ச் மாதம் தொடங்கும்: அமைச்சர் ஹர்ஷ வர்தன்
நாட்டில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அடுத்த மாதம் துவங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.


நாட்டில் மூன்றாம் கட்ட கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் அடுத்த மாதம் துவங்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
கரோனா தடுப்பூசி குறித்து மக்களவையில் பேசிய அவர் கூறியதாவது:
இந்தியாவில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டு சீராக அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டது.
இரண்டாம் கட்டம் பிப்ரவரி 2 முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடங்கியது. இதில் முன்களப் பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இரண்டு கோடி தடுப்பூசிகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மார்ச் மாதம் மூன்றாம் கட்டம் தொடங்கும். இதில் 50 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
மத்திய பட்ஜெட்டில் 2021-22 கரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.35,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஒதுக்கீடு அதிகரிக்க முடியும் என்று நிதியமைச்சர் உறுதியளித்துள்ளார்.
மூன்றாம் கட்டம் தொடங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும். தடுப்பூசிகளுக்கு மானியம் வழங்குவது குறித்து அமைக்கப்பட்டுள்ள தேசிய நிபுணர் குழு அது தொடர்பான முடிவுகளை எடுக்கும் என்று அமைச்சர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...