லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்: செங்கோட்டையன்

விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்பதால் கரோனா அச்சம் தேவையில்லை: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

News image
திருப்பூரை அடுத்த முதலிபாளையம் ஊராட்சியில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளியை சனிக்கிழமை தொடக்கி வைத்து பேசுகிறார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், உடன் கால்நடை பராமரிப்பு துறை அமைச்
Updated On :6 பிப்ரவரி 2021, 6:15 am

DIN

திருப்பூர்: விருப்பமுள்ள மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்பதால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவைக்கு உள்பட்ட முதலிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளியாகத் தொடக்கி வைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பல்வேறு சாதனை சரித்திரங்களைப் படைத்து வருகிறார். அதிலும் குறிப்பாக விவசாயிகளின் நலன் கருதி புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நமது அரசியல் வரலாற்றில் தேர்தல் நேரத்தில் மட்டும் தான் மக்களின் கோரிக்கை, விவசாயிகளின் கோரிக்கைகள் அறிவிப்பது வழக்கம். ஆனால் தமிழக வரலாற்றில் விவசாயிகளின் கூட்டுறவுக்கடன் ரத்து செய்து அறிவிப்பை வெளியிட்டு வரலாற்றைப் படைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக ஆசியா முதன்முதலாக கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

விவசாயிகளின் நலன் கருதி டெல்டா பகுதிகளை சிறப்பு மண்டலமாக அறிவித்து விவசாயிகளைப் பாதுகாக்கிறது. வறட்சிப் பகுதியாக இருக்கும் பகுதிகளில் குடிமராமாத்துத் திட்டங்களையும், அத்திக்கடவு-அவிநாசி உள்ளிட்ட திட்டங்களையும் கொண்டுவந்துள்ளது.

இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வரையில் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகிறது தமிழக அரசு. ஆளுமைத்திறனில் நமது மாநிலம் மட்டும்தான் முதலிடத்தில் உள்ளது என்றார்.

இதையடுத்து, பள்ளி மாணவர்களுக்கு கரோனா நோய்த தொற்று ஏற்படுவது தொடர்பான கேள்விக்கு, பள்ளிகள், நடைபெறவேண்டும், அண்டை மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாங்கள் படிப்படியாகத்தான் திறக்கப்பட்டு வருகிறோம். விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளி வரலாம் என்று தெரிவித்துள்ளதால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை என்றார்.

இந்த சந்திப்பின்போது, கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்,  பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சரவணமூர்த்தி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.