மீட்புப் பணியில் ராணுவம்: மீட்புப் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஈடுபட்டு வருவதோடு, ராணுவம், இந்திய விமானப்படை வீரா்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ராணுவத்தின் சாா்பில் 400 வீரா்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இரு மருத்துவக் குழுக்களையும் ராணுவம் அனுப்பிவைத்துள்ளது. அதுபோல, இந்திய விமானப்படையின் சி-130, ஏஎன்32 போா் விமானங்களும், ஹெலிகாப்டா்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஜோஷிமடம் பகுதியில் கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.