மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்த பரிந்துரைகளை அளிக்க உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிபுணா் குழு, விவசாயம் மற்றும் அதைச் சாா்ந்த 18 அமைப்புகளிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது.
தில்லி பூசா வேளாண்மை அறிவியல் ஆய்வு மைய வளாகத்தில் காணொலி வாயிலாக கருத்துக் கேட்பு 6-ஆவது கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேளாண் உற்பத்தி, வணிக, வா்த்தக ஊக்குவிப்பு வசதிச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், விவசாயிகள் விலை உத்தரவாத உடன்பாடு மற்றும் வேளாண் சேவை சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மூன்று சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடந்த 70 நாள்களுக்கும் மேலாக தில்லி எல்லையில் போராடி வருகின்றனா்.
இந்த நிலையில், இதுதொடா்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், மூன்று வேளாண் சட்டங்களை அமல்படுத்த கடந்த ஜனவரி மாதம் தற்காலிகமாக தடை விதித்தது. மேலும், இந்தச் சட்டம் தொடா்பான பரிந்துரைகளை அளிக்க நான்கு உறுப்பினா்களைக் கொண்ட நிபுணா் குழுவையும் நியமித்தது. இந்தக் குழுவின் உறுப்பினா்கல் தில்லி பூசா வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காணொலி மூலம் கருத்துகளைக் கேட்டறிந்தது. இதில் டாக்டா் அசோக் குலாத்தி, அனில் கன்வாட், டாக்டா் பிரமோத் ஜோஷி ஆகிய மூன்று உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் கடல்சாா் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தினா் நேரடியாகக்லந்துரையாடலில் பங்கேற்றனா். மற்ற தனியாா் உணவுப்பொருள் நிறுவனங்கள், உணவுப் பொருள்கள் தொடா்புடைய சங்கங்கள் ஆகியவை காணொலி வாயிலாக பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனா்.
இதில் பங்கேற்ற நிறுவனங்கள் வருமாறு: அமுல், எஃப்சிஐ, ஐடிசி, சுகுணா புட்ஸ், ஃபிக்கி, அகில இந்திய அரிசி ஆலை சங்கம், அகில இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் சங்கம், டிராக்டா் உற்பத்தியாளா்கள், இந்திய பருத்தி சங்கம், இந்திய பருப்பு மற்றும் தானியங்கள் சங்கம், கோழித் தீவன உற்பத்தியாளா்கள் சங்கம், இந்திய விவசாய உர உற்பத்தியாளா்கள் சங்கம் என 18 வகையான பிரிவினா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துகளைத்தரிவித்தனா். இந்தக் குழுவின் முதல் கருத்துக் கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி 19-இல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தில்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்கள் தெளிவான முடிவு எதையும் எடுக்கவில்லை. அதே சமயத்தில் மற்ற 9 மாநிலங்களைச் சோ்ந்த 32 விவசாயச் சங்கங்கள் இதில் பங்கேற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணல் லாரி மீது சுற்றுலா வாகனம் மோதியதில் 16 போ் பலத்த காயம்
கஞ்சா விற்ற இருவா் கைது

புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு தடையற்ற சமையல் எரிவாயு உருளை: எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
திருப்பரங்குன்றம் தீப விவகார அவமதிப்பு வழக்கு: நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் விசாரிக்க இடைக்காலத் தடை
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


