சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

குலாம் நபி ஆசாத்தின் சேவையை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்த பிரதமர்

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று அவை உறுப்பினர்களின் உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடிப் போனது.

News image
குலாம் நபி ஆசாத்தின் சேவையை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்த பிரதமர்
Updated On :9 பிப்ரவரி 2021, 8:02 am

ANI


புது தில்லி: நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை இன்று அவை உறுப்பினர்களின் உணர்ச்சிப் பெருக்கால் திக்குமுக்காடிப் போனது.

காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் குலாம் நபி ஆசாத் ஓய்வு பெறவிருப்பதை முன்னிட்டு அவையில் இன்று பிரியாவிடை வழங்கப்பட்டது.

அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் ஆற்றிய பணிகளை கண்ணீர் மல்க நினைவு கூர்ந்தார்.

Story image

மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றி வரும் குலாம் நபி ஆசாத் ஓய்வு பெற்ற பிறகு, அவருக்குப் பதிலாக நியமிக்கப்படும் நபர், அவரது பணியை ஈடு செய்ய மிகவும் சிரமப்பட நேரிடும். ஏனென்றால், குலாம் நபி ஆசாத், தனது கட்சிக்காக மட்டுமல்லாமல், இந்த நாட்டுக்காகவும், மாநிலங்களவைக்காகவும் பணியாற்றியவர், எனவே அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலின்போது குஜராத்தைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு சிக்கிக் கொண்டனர். அந்த நேரத்தில், குலாம் நபி ஆஸாத் என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தனது குடும்ப உறுப்பினர்கள் அங்கு சிக்கித் தவித்தால் எந்த அளவுக்கு வருத்தப்படுவார்களோ அந்த அளவுக்கு வருந்தினர், அவர்களது நலனை விரும்பினார் என்று கண் கலங்கப் பேசினார் மோடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.