பெலுர்: கர்நாடக மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் நடந்து வரும் தொல்லியல் அகழ்வாராய்ச்சியில், ஹொய்சாலா கட்டடக் கலையில் கட்டப்பட்ட சமண கோயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இந்திய தொல்லியல் துறையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
பார்ப்பதற்கு சமண கோயிலைப் போன்று தோற்றமளிக்கும் மிகப் பழமையான கட்டடக் கலையில் கட்டப்பட்ட ஹோய்சாலா காலக் கோயில், கர்நாடக மாநிலம் பெலுர் தாலுகா, ஷாந்திநாதா பசடி என்ற பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த தொல்லியல் கண்டுபிடிப்பு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனென்றால் ஹொய்சாலா ஆட்சியாளர்கள் சமண மதத்தையும் ஆதரித்தனர் என்பதை இது காட்டுகிறது.
இந்தப் பகுதியில் தொல்லியல் துறையின் மண்டல இயக்குநர் டாக்டர் ஜி. மகேஷ்வரி தலைமையிலான குழுவினர் கடந்த ஜனவரி மாதம் முதல் அகழாய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அங்கு அகழாய்வுப் பணிகள் நடத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

அரசுப் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூல்: போக்குவரத்து அதிகாரிகளுக்கு அபராதம்

மனைவியுடன் தகராறு; கணவா் தூக்கிட்டுத் தற்கொலை

புதுச்சேரி அரசு சாா்பில் தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு அமைச்சா் மரியாதை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


