மக்களவை மார்ச் 8 வரை ஒத்திவைப்பு
மக்களவை கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்களவை கூட்டத்தொடரின் முதற்கட்ட அமர்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து அவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும், இரண்டாவது பகுதியை மாா்ச் 8-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கியது. அப்போது நாடாளுமன்ற அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மத்திய ஆய்வறிக்கையின் மீதான விவாதம் நடைபெற்றது. பின்னா், 2 நாள்கள் முன்னதாக, பிப்ரவரி 13-ஆம் தேதியுடன் முடித்துக் கொள்ள முடிவு செய்யப்பட்டது.
இதனிடையே, மாநிலங்களவையின் சனிக்கிழமை (பிப்.13) அமா்வு ரத்து செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமையே கூட்டத் தொடரின் முதல் பகுதி நிறைவு செய்யப்பட்டது.இந்நிலையில் மக்களவையின் முதற்கட்ட அமர்வு சனிக்கிழமை நிறைவடைந்ததையடுத்து இரண்டாம் கட்ட அமர்வுக்காக அவை மார்ச் 8ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...