ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பாஜகவில் இணைவது பெருமைக்குரியது: தினேஷ் திரிவேதி

பாஜகவில் இணைவது பெருமைக்குரிய செயல் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

News image
தினேஷ் திரிவேதி
Updated On :13 பிப்ரவரி 2021, 12:20 pm

DIN


பாஜகவில் இணைவது பெருமைக்குரிய செயல் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிய தினேஷ் திரிவேதி தெரிவித்துள்ளார்.

பிரதமா் நரேந்திர மோடியை கடுமையாக விமா்சித்து தினமும் பேச வேண்டும் என்று கட்சி தன்னை வலியுறுத்துவதாகக் கூறி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினா் தினேஷ் திரிவேதி தனது பதவியை வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தார்.

இதனையடுத்து அவர் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகின. தினேஷ் திரிவேதி பாஜகவில் இணைந்தால் அவரை வரவேற்போம் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் பேசிய தினேஷ் திரிவேதி, பாஜக மூத்த தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதையுள்ளது. பாஜகவில் இணைந்தால் என்னை வரவேற்கத் தயாராகவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் எந்த கேள்விகளும் இல்லை. ஆனால் நான் மனரீதியாக சமநிலையை அடைந்து சிந்திக்க வேண்டும் என்று கூறினார்.

ஏற்கெனவே, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து மாநில அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.