மேற்குவங்கத்தில் அடுத்தது எங்கள் ஆட்சிதான்: பாஜக எம்.பி. பேச்சு
மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார்.


மேற்குவங்கத்தில் அடுத்தது பாஜக ஆட்சிதான் என்று மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பிரசாரம் அங்கு சூடுபிடித்துள்ளது. தற்போது திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி செய்துவரும் நிலையில், பாஜக ஆட்சியைப் பிடிக்க தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு மிட்னாபூரின் ஹரிராஜ்பூரில் தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய மேற்குவங்க பாஜக மாநிலத் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான திலீப் கோஷ், மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்துள்ளார்.
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நிகழும் எனவும் பாஜக பெரும்பான்மையை ஆட்சியைப் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், 'நாங்கள் இந்த தேர்தல் விளையாட்டில் வெற்றி பெற்று மாற்றத்தை ஏற்படுத்துவோம். இதற்காக எங்களுடைய தேர்தல் யாத்திரையை நிறுத்த பல முறை முயன்றார்கள். ஆனால், தடைகளைத் தாண்டி இன்று மக்களை சந்திக்க வந்துள்ளேன். வரும் தேர்தலில் நீங்கள் பாஜகவுக்கு வாக்களித்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
எங்கள் விளையாட்டு முடிந்துவிட்டது என்று எதிர்க்கட்சி சொல்கிறது, ஆனால் எங்கள் விளையாட்டு நடந்து கொண்டிருக்கிறது என்பதை உறுதியாகச் சொல்கிறேன். தயாராக இருங்கள். வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அவர்களின் முகத்தைப் பார்ப்பீர்கள். நாங்கள் அனைத்து விஷயங்களிலும் சட்டத்தைப் பின்பற்றுகிறோம். அதற்காக எங்களை கோழை என்று நினைத்துவிட வேண்டாம்' என்று பேசியுள்ளார்.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வெளியேற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் யாத்திரையை கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் பாஜக தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...