பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

சாலைப் பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி கடன் வாங்கத் திட்டம்: சவான்

சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் தெரிவித்துள்ளார். 

News image

Minister Ashok Chavan_lib

Updated On :15 பிப்ரவரி 2021, 10:08 am

PTI

சாலைகளை நிர்மாணிப்பதற்கு ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15 ஆயிரம் கோடி கடன் பெறத் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் அசோக் சவான் திங்களன்று தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

சாலைப் பணிகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சாலைகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான நிதி மாநில பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட அதிகமாக இருக்கும்.

இதற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து ரூ.15,000 கோடியைப் பெயரளவு வட்டி விகிதத்தில் 1 சதவீதம் முதல் 1.5 சதவீதம் வரை கடன் பெற மகாராஷ்டிர அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த கடன் விண்ணப்பத்திற்கு அமைச்சரவை அனுமதி பெறும் செயல்முறை நடந்து வருகிறது. சொத்து பணமாக்குதல் மூலம் நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளோம். 

கடந்தாண்டு கரோனா வைரஸ் தொற்று காரணமாகச் சாலைப் பணிகளுக்காக 30-40 சதவீதம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு எங்களுக்குக் கூடுதல் நிதி தேவைப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

கரோனா வைரஸ் பரவலையடுத்து, பிப்ரவரி 19-ஆம் தேதி திட்டமிடப்பட்ட சிவ் ஜெயந்தி வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் கொண்டாட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.