சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி

ஒடிசா மாநிலத்தில் உள்ள கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியானது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

News image
ஒடிசா சரணாலயத்தில் 15 நாள்களில் 6 யானைகள் பலி
Updated On :16 பிப்ரவரி 2021, 7:52 am

DIN

ஒடிசா மாநிலத்தில் உள்ள கார்ல்பட் வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியானது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தின் கலஹந்தியில் உள்ளது கார்ல்பட் வனவிலங்கு சரணாலயம். சுமார் 175 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த சரணாலயத்தில் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் யானை, சிறுத்தை, மான், இந்திய ஓநாய், காட்டு நாய், காட்டு பன்றி, சோம்பல் கரடி, மலபார் அணில் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

இந்நிலையில் இந்த சரணாலயத்தில் கடந்த 15 நாள்களில் 6 யானைகள் பலியாகி இருப்பது வன ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ள மாநில முதல்வர் நவீன் பட்நாயக் யானைகள் இறப்பிற்கு கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தனது சுட்டுரைக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.