ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல் 13-ஆவது நாளைக் கடந்திருக்கும் நிலையில், எரிபொருள் தட்டுப்பாடு மட்டுமல்ல, அதற்கும் மேல் பல பிரச்னைகள் எழும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.
சர்வதேச சந்தையில், சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்வு கண்டிருப்பதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் குண்டு வெடிப்புச் சப்தங்களும், குண்டு வெடிக்கப்போகிறது என்பதற்கான சைரன் ஒலிகளும் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக நாள்தோறும் கடந்து வந்துகொண்டிருந்த சரக்குக் கப்பல்கள் தற்போது மாற்று வழிகளில் பயணித்து வருகின்றன.
உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தில் 5ல் ஒரு பங்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகவே மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. ஆனால், அந்தப் பாதை தற்போது மூடப்பட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களால் கப்பல்களும் அவ்வழியாக வரத் துணிவதில்லை.
இதனால், பல நாடுகளில் ஏற்றுமதி இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளது. அதில், ஆறு பொருள்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
அலுமினியம்: நான்கு ஆண்டுகளுக்குப் பின், அலுமினியம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கத்தார் மற்றும் பஹ்ரைனிலிருந்து பெருமளவில் அலுமினியம் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், போர்ப் பதற்றம் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. அலுமினியம் தேவைப்படும் நாடுகள் ஆசியாவிலிருந்து அதனை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சல்ஃபர் மற்றும் யூரியா : எணணெய் மற்றும் எரிவாயுவை சுத்திகரிக்கும்போது சல்ஃபர் கிடைக்கிறது. இது பெரும்பாலும் உரமாகவும் தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கும் தேவைப்படுகிறது. ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலகின் மொத்த தேவையில் பாதி அளவு சல்ஃபர் தேங்கியிருக்கிறது.
அதுபோலவே, யூரியாவும் உலக நாடுகளுக்கு அதிகத் தேவையாக இருக்கும் நிலையில் அதன் விநியோகமும் பாதிக்கப்பட்டு கிட்டத்தட்ட 35 சதவிகிதம் விலை உயர்ந்துள்ளது.
எத்தனால் மற்றும் சர்க்கரை: பிரேசில் நாடு, உலகின் முன்னணி கரும்பு உற்பத்தி நாடாக இருக்கும் நிலையில், சர்க்கரை மற்றும் எத்தனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், எத்தனால் விலையும் 10 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஹீலியம்: ஈரான் மீதான தாக்குதலால் ஹீலியம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கத்தார்தான் அதிக உற்பத்தி செய்யும் பகுதியாக இருக்கும் நிலையில், அங்கிருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட உலகின் பாதி ஹீலிய விநியோகம் தடைபட்டுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் துபை: துபை நாட்டுக்கு பெரும்பலான உணவுப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. நீர்ப் பற்றாக்குறை காரணமாக உணவு உற்பத்தியை செய்ய முடியாத துபை போன்ற நாடுகள், உணவு போக்குவரத்தை உறுதி செய்ய தீவிர நடவடிக்கை எடுத்த வருகின்றன. ஹோர்முஸ் நீரிணையைத் தவிர்த்து மாற்று வழிகள் மற்றும் மாற்று நாடுகளையும் துபை தொடர்பு கொண்டு வருகிறது.
Summary
About how the Iran war will affect not only gas but also aluminum, urea, etc.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடல்! திருப்பி அனுப்பப்பட்ட இந்திய கப்பல்கள்!

அமெரிக்க முற்றுகையால் ஹோர்முஸ் நீரிணைக்கு மீண்டும் கட்டுப்பாடு! - ஈரான் அறிவிப்பு!

ஈரான் போரால், எந்தெந்த பொருள்கள் ஏற்றுமதிக்கு பாதிப்பு?

துருப்புச் சீட்டு ஈரான் கையில்...
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


