உ.பி. பேரவை: ஆளுநர் உரையை புறக்கணித்து சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்
உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தது.


உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து சமாஜ்வாதி கட்சி வெளிநடப்பு செய்தது.
சட்டப் பேரவையில் ஆளும் பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியவாறு பதாகைகளை ஏந்தி பேரவைத் தலைவரையும் முற்றுகையிட்டதால், அவையில் அமளி நிலவியது.
உத்தரப் பிரதேச மாநிலம் லெக்னெளவில் சட்டப் பேரவைக் கூட்டம் இன்று கூடியது. இதில் ஆளுநர் ஆனந்திபென் படேல் உரையைத் தொடங்கியபோது சமாஜ்வாதி கட்சியினர் கூச்சல் எழுப்பினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரப்பு தெரிவித்து பாஜகவிற்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அவையிலிருந்து சமாஜ்வாதி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.
முன்னதாக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சமாஜ்வாதி கட்சியினர் டிராக்டரில் கரும்புகளை ஏற்றிக்கொண்டு சட்டப் பேரவைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...