பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

எரிபொருள் விலையேற்றம்: மின்னணு ஸ்கூட்டரில் சென்ற மம்தா

பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மின்னணு இருசக்கர வாகனத்தில் சென்றது அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது.

News image
எரிபொருள் விலையேற்றம்: மின்னணு ஸ்கூட்டரில் சென்ற மம்தா
Updated On :25 பிப்ரவரி 2021, 8:28 am

DIN

பெட்ரோல், டீசல் விலையுயர்வைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மின்னணு இருசக்கர வாகனத்தில் சென்றது அனைவரது கனவத்தையும் ஈர்த்துள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கேற்ப நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்திருந்தாலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. 

Story image

இதனைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் எதிர்க் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் விலையுயர்வைக் கண்டிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேட்டரி பொருத்தப்பட்ட மின்னணு இரு சக்கர வாகனத்தில் பயணம் மேற்கொண்டார்.

Story image

பொதுமக்களுக்கு மத்தியில் நெரிசல் மிகுந்த சாலையில் மம்தா பானர்ஜி இருசக்கர வாகனத்தில் சென்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.