பாகிஸ்தானில் அனைத்து பள்ளிகளும் மார்ச் 1 முதல் வழக்கம்போல் 5 நாள்கள் வகுப்புகள் செயல்படுத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மெஹ்மோத் தெரிவித்தார். என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் மெஹ்மோத் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் வெளியிட்ட அறிக்கையில்,
மார்ச் 1 திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளிலும் வழக்கம்போல் 5 நாள்கள் வகுப்புகள் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளன.
சில முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்.28 வரை மட்டுமே செல்லும். எனவே, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கல்வி நிறுவனத்திற்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து கல்வி நிறுவனங்களிலும் உடல் வெப்பநிலை பரிசோதித்தல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார்.
முன்னதாக, கராச்சி, ஹைதராபாத், லாகூர் மற்றும் பெஷாவர் ஆகிய மாவட்டங்களில் ஒருநாள் விட்டு ஒருநாள் 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கே.எல். ராகுல் 152*: தில்லி கேபிடல்ஸ் 264 ரன்கள் குவிப்பு!

மேட்டுப்பாளையம் அருகே தாயைப் பிரிந்து தவிக்கும் குட்டி யானை!

ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்

அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


