இங்கிலாந்திலிருந்து கடந்த டிசம்பர் 14ஆம் தேதி கேரளத்துக்கு திரும்பிய ஆறு பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட ஆறு பேரில், கோழிக்கோடு, ஆலப்புழாவில் தலா இரண்டும், கோட்டயம் மற்றும் கண்ணூரில் தலா ஒன்று அடங்கும் என்று அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறுகையில்,
பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் இருந்து அதிக மக்கள் வெளியேறி வருகின்றனர். தற்போது நாம் சுயகட்டுப்பாடு மற்றும் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். மக்கள் அவசர தேவைகளுக்காக மட்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டும். அடுத்த சில வாரங்களுக்கு இது கட்டாயம் பின்பற்றவேண்டியது அவசியமாகும் என்றார்.
இங்கிலாந்திலிருந்து திரும்பிய 6 பேருக்கு கரோனா தொற்று பரிசோதித்ததிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் மாதிரிகள் புணேவில் உள்ள வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டன. அதில், அவர்கள் ஆறு பேரும் புதிய வகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவர்கள் ஆறு பேரும் தற்போது வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், அவர்கள் தொடர்பிலிருந்தவர்களின் பட்டியல்கள் தயாரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் முதல் கட்டமாக சுகாதார நிபுணர்களுக்கு 5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசிகளை வழங்குமாறு அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது.
இந்தியாவில் இதுவரை 58 பேர் உருமாறிய கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி - தாம்பரம் இடையே நாளை (ஏப். 26) சிறப்பு ரயில்!

225 இடங்களைக் கைப்பற்றி பாஜகவை வேரறுப்போம்: திரிணமூல் காங்கிரஸ்

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


