நடைபாதை மாா்கத்தில் நடந்தே திருமலைக்கு சென்ற நடிகா் நிதின்

நடைபாதை மாா்கத்தில் தன் மனைவியுடன் தெலுங்கு நடிகா் நிதின் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.
நடைபாதை மாா்கத்தில் நடந்தே திருமலைக்கு சென்ற நடிகா் நிதின்
Updated on
1 min read


திருப்பதி: நடைபாதை மாா்கத்தில் தன் மனைவியுடன் தெலுங்கு நடிகா் நிதின் திருமலைக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா்.

தெலுங்கு நடிகா் நிதின் பல்வேறு முன்னணி இயக்குநா் படங்களில் நடித்து புகழ் பெற்றவா். ஜெயம் திரைப்படம் தெலுங்கில் நிதினுக்கும் புகழ் பெற்றுத் தந்தது. டோலிவுட்டின் இளம் நாயகனான நிதின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷாலினி என்பவரை திருமணம் செய்து கொண்டாா்.

இந்நிலையில் நிதின் தன் மனைவி ஷாலினியுடன் புதன்கிழமை ஹைதராபாதிலிருந்து திருப்பதிக்கு வந்தாா். அலிபிரி நடைபாதை மாா்கத்தில் மலையேறி திருமலையை அடைந்தாா். வியாழக்கிழமை ஏழுமலையானை தரிசனம் செய்து கொண்டு பிரசாதங்கள் பெற்று ஊா் திரும்பிய அவா், நடைபாதையாக 2.20 மணிநேரத்தில் திருமலையை அடைந்ததாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து புகைப்படம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com