தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கர்நாடகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள், 4 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு
Updated On :7 ஜனவரி 2021, 12:18 pm

DIN

கர்நாடக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட 3 நாள்களில் 51 ஆசிரியர்கள் மற்றும் 4 மாணவர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் 8 மாதங்களுக்குப் பிறகு 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகி வருவது அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பள்ளிகள் திறக்கப்பட்டதிலிருந்து இதுவரை 51 ஆசிரியர்களுக்கும், 4 மாணவர்களுக்கும் கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கணக்கெடுக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் கரோனா பாதித்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பள்ளிகள் மூன்று நாள்களுக்கு மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.