டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

‘பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் மத்திய அரசு கொள்ளையடிக்கிறது ’: ராகுல்காந்தி

பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் மீதான வரிவசூலிப்பின் மூலம் மத்திய அரசு கொள்ளையடுத்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

News image
‘பெட்ரோல், டீசல் வரி மூலம் கொள்ளையடிக்கும் மத்திய அரசு’: ராகுல்காந்தி
Updated On :7 ஜனவரி 2021, 1:32 pm

DIN

பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருள் மீதான வரிவசூலிப்பின் மூலம் மத்திய அரசு கொள்ளையடுத்து வருவதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார்.

சுமாா் ஒரு மாதத்துக்குப் பிறகு பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயா்த்தின. இந்த விலை உயா்வு முன்னெப்போதும் இல்லாத அளவை நெருங்கியது.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் மாற்றியமைத்து வந்தன. கரோனா பரவல் காரணமாக இந்த நடைமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டது.

எனினும், சுமாா் ஒரு மாதத்துக்கு பிறகு அவற்றின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதன்படி தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகளும் உயா்த்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்விற்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “ பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் அபரிமிதமான 'வளர்ச்சி' ஏற்பட்டுள்ளது. எரிபொருளுக்கு அதிக வரி வசூலித்து மோடி அரசு பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பெட்ரோல்-டீசல் மீது ஜிஎஸ்டி வரியை அமல்படுத்த அரசு தயாராக இல்லாததற்கு இதுவே காரணம்” எனவும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.