ரயில்வே முன்பதிவு மைய பயணச்சீட்டு ரத்து: கால அவகாசம் நீட்டிப்பு

2020 மார்ச் 21ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில்
ரயில்வே முன்பதிவு மைய பயணச்சீட்டு ரத்து: கால அவகாசம் நீட்டிப்பு
ரயில்வே முன்பதிவு மைய பயணச்சீட்டு ரத்து: கால அவகாசம் நீட்டிப்பு
Updated on
1 min read

புது தில்லி: 2020 மார்ச் 21ம் தேதி முதல் 2020ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி வரையிலான பயண காலத்தில், முன்பதிவு மையங்களில் வாங்கிய ரயில் பயணச் சீட்டுகளை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால வரம்பை, பயண தேதியிலிருந்து ஒன்பது மாதம் வரை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே துறையால் ரத்து செய்யப்பட்ட, கால அட்டவணைப் பட்டியலில் உள்ள வழக்கமான ரயில்களுக்கு மட்டும் இது பொருந்தும்.

ஒருவேளை பயணச் சீட்டு 139 என்ற எண் மூலமோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் மூலமோ ரத்து செய்யப்பட்டால், மேலே குறிப்பிட்ட பயண காலத்துக்கான டிக்கெட்டுகளை, முன்பதிவு மையங்களில் ஒப்படைப்பதற்கான காலவரம்பும், பயண தேதியிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயண தேதியிலிருந்து ஆறு மாதங்கள் முடிந்த பிறகு, பல பயணிகள், பயணச்சீட்டுகளை ரயில்வே மண்டல அலுவலகத்திலோ அல்லது டிடிஆர் மூலமாகவோ அல்லது பொது விண்ணப்பம் மூலமாகவோ தாக்கல் செய்திருக்கலாம். முன்பதிவு மையங்களில் வாங்கிய அந்த பயணசீட்டுகளுக்கு, பயணிகள் முழு கட்டணத்தையும் திரும்பப் பெற அனுமதிக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com