/

கர்நாடகத்தில் 6 காகங்கள் இறந்தது குறித்து ஆய்வு: சுகாதாரத்துறை

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகத்தில் 6 காகங்கள் உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதகர் தெரிவித்துள்ளார்.

News image
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதகர் (கோப்புப்படம்)
Updated On :7 ஜனவரி 2021, 12:22 pm

DIN

பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், கர்நாடகத்தில் 6 காகங்கள் உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுகாதகர் தெரிவித்துள்ளார்.

பறவைகளைத் தாக்கும் பறவைக் காய்ச்சல் கேரள மாநிலத்தில் கண்டறியப்பட்டுள்ள நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது.

ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டு வரும் நிலையில், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்தியக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் பறவைக் காய்ச்சல் நடவடிக்கைகளை கண்காணிக்க மத்திய அரசு, தில்லியில் கண்காணிப்பு மையம் ஒன்றையும் அமைத்துள்ளது.

கேரளத்தையொட்டியுள்ள கர்நாடக மாநிலங்களில் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கர்நாடகத்தில் 6 காகங்கள் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்படாத நிலையில், 6 காகங்கள் உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே காகத்தின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாநில எல்லைகளிலுள்ள மாவட்டங்களில் போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.