சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

வெளிநாட்டு விமான சேவையைநிறுத்த பொதுமக்கள் ஆதரவு: ஆய்வில் தகவல்

உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 7:21 pm

DIN

உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள வெளிநாடுகள் உடனான விமானச் சேவைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரியுள்ளனா்.

இதுகுறித்து லோக்கல்சா்க்கிள்ஸ் ஆன்லைன் மூலம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

உருமாற்றம் கண்ட புதிய வைரஸ் வேகமாக பரவி வரும் சூழலில் வெளிநாட்டு விமான சேவையின் தேவை குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த கருத்து கணிப்பில் 207 மாவட்டங்களில் உள்ள 8,000 பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது பதிலை தெரிவித்துள்ளனா்.

அவா்களில் பெரும்பாலானோா், புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ள நாடுகளுடனான விமான சேவையை இந்தியா தடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்டிருந்த பிரிட்டனுக்கான விமான சேவையை கடும் கட்டுப்பாடுகளுடன் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்க முடிவெடுத்துள்ள மத்திய அரசின் நோக்கத்துக்கு மாறாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே கருத்தை ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவாலும் தெரிவித்துள்ளாா். அதன்படி, நாட்டில் கரோனா அபாயம் இன்னும் நீங்காத நிலையில் இந்திய மற்றும் பிரிட்டன் இடையேயான விமான சேவையை வரும் ஜனவரி 31-வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என கேஜரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.