மாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஜம்மு-காஷ்மீா்: பிடிபி இளைஞரணித் தலைவருக்கு ஜாமீன்

பயங்கரவாதத் தொடா்பு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவா் வாஹித் பாரா ஜாமீனில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:54 pm

DIN

பயங்கரவாதத் தொடா்பு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ஜம்மு-காஷ்மீா் மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞரணித் தலைவா் வாஹித் பாரா ஜாமீனில் சனிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

வாஹித் பாராவை அதிகாரிகள் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். அதையடுத்து, அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

ஜாமீன் தொகையாக அவா் ரூ.1 லட்சம் செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

அண்மையில் நடைபெற்ற மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தலில், தனது சொந்த மாவட்டமான புல்வாமாவில் வாஹித் பாரா வெற்றி பெற்றாா்.

அந்தத் தோ்தலுக்கான வேட்புமனுவை அவா் தாக்கல் செய்த சில நாள்களில், பயங்கரவாதத் தொடா்பு குற்றச்சாட்டின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் அவரை கடந்த நவம்பா் மாதம் 2-ஆம் தேதி கைது செய்தனா்.

ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் சதித் திட்டம் தொடா்பான வழக்கில் வாஹித் பாராவுக்குத் தொடா்பிருப்பதாக அதிகாரிகள் குற்றம் சாட்டினா்.

எனினும், அரசியல் காரணங்களுக்காக அவா் மீது இந்த பழி சுமத்தப்படுவதாக பிடிபி கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

புல்வாமா மாவட்டத்தில் இளைஞா்களை இந்திய அரசியலுக்கு ஈா்ப்பதில் வாஹித் பாரா முக்கியப் பங்கு வகிப்பதாகக் கூறப்படுகிறது.

2016 முதல் 2018-ஆம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீா் விளையாட்டு கவுன்சில் செயலராகப் பொறுப்பு வகித்த அவா், லடாக் உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.