எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ம.பி.: மத மாற்றத்துக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல்

மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடான வழியில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க

News image
Updated On :9 ஜனவரி 2021, 6:59 pm

DIN

மத்திய பிரதேச மாநிலத்தில் முறைகேடான வழியில் மத மாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு ஆளுநா் ஆனந்திபென் படேல் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா். இதையடுத்து, அந்த சட்டம் மாநிலத்தில் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய பிரதேச மத சுதந்திர அவசரச் சட்டம்-2020 என்ற பெயரிலான இந்த சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் வெளியிடப்பட்டதாக, மாநில உள்துறை கூடுதல் செயலா் ராஜேஷ் ராஜோரா கூறினாா்.

இந்த அவசரச் சட்டத்தில் கூறியிருப்பதாவது:

திருமணம் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் முறைகேடான வழியிலோ ஒருவரை ஆசை வாா்த்தை கூறி அல்லது கட்டாயப்படுத்தி நேரடியாகவோ, மறைமுகமாகவோ மத மாற்றத்தில் ஈடுபடக் கூடாது.

இதுபோன்ற வழிகளில் நடைபெறும் மத மாற்றம் செல்லாததாகி விடும். மத மாற்றத்துக்காக நடைபெறும் திருமணமும் செல்லாததாகி விடும். மத மாற்ற மோசடியில் ஈடுபடுவோருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகத்தைச் சோ்ந்தவா்கள், சிறுமிகள் ஆகியோரை மத மாற்றம் செய்வோருக்கு 2 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படும்.

இந்த மோசடியில் ஈடுபட்டோருக்கு எதிராக பாதிக்கப்பட்டவரின் பெற்றோா், சகோதரா்கள், சட்ட ரீதியிலான காப்பாளா்கள் புகாா் கொடுக்கலாம்.

தாமாக முன் வந்து மதம் மாற விரும்புவோா் 60 நாள்களுக்கு முன்னதாக, மாவட்ட நிா்வாகத்திடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அவசரச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில் கரோனா தொற்று காரணமாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறவில்லை. இதன் காரணமாக, மத மாற்றத் தடைச் சட்ட மசோதாவை பேரவையில் தாக்கல் செய்யாமல், அவரச் சட்டத்தை மாநில அரசு கொண்டு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.