
மகாராஷ்டிரத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய துணை முதல்வரும், நிதியமைச்சருமான அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிரம் மாநிலம் பண்டாரா அரசு பொது மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் இருந்த பிரிவில் சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மாநிலத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளையும் ஆய்வு செய்ய துணை முதல்வர் அஜித் பவார் உத்தரவிட்டுள்ளார்.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை சரிசெய்வதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்றும், இது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.