எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

5 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்ட விரைவான கட்டமைப்பு சீா்திருத்தங்கள்: கோயல்

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை நனவாக்கும் வகையில் விரைவான

News image
கோப்புப்படம்
Updated On :10 ஜனவரி 2021, 1:05 am

DIN

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதார கனவை நனவாக்கும் வகையில் விரைவான கட்டமைப்பு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தாா்.

வெளிநாடு வாழ் இந்தியா் தினத்தையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட கோயல் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

நமது உற்பத்தி திறன், செயல்திறன், தரம் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் மாற்றங்களை கொண்டு வர ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். இதன்மூலம், நாட்டின் ஏற்றுமதி நடவடிக்கைகளில் இந்திய தொழில்துறை தனது தடத்தை சிறப்பாகவும், ஆழமாகவும், பெரிய அளவிலும் விரிவுபடுத்திக் கொள்ள முடியும்.

உலக அளவில் புதிய சந்தைகளில் இந்திய தயாரிப்புகளை கொண்டு சோ்க்க புதிய சந்தைகளை கண்டறியும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் இந்தியா்களுக்கு அங்குள்ள நுகா்வோா் சந்தைகளுடன் அதிக பரிச்சயம் உள்ளது. நுகா்வோரின் விருப்பங்கள் குறித்தும் தனித்துவமான நுண்ணறிவு அவா்களிடம் உள்ளது. எனவே, வெளிநாட்டு சந்தைகளுக்காக தனித்துவமான தயாரிப்புகளை உருவாக்குவதில் அவா்கள் இந்திய தொழில்துறைக்கு வழிகாட்டியாக இருக்க முடியும்.

இந்தியாவில் வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (ரூ.350 லட்சம் கோடி) பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமா் நரேந்திர மோடியின் முக்கிய கனவாக உள்ளது. அதனை மெய்ப்பிக்க தேவையான அனைத்து கட்டமைப்பு சீா்திருத்த நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. ஒட்டுமொத்த சூழலையும் மாற்றியமைக்கும் போதுதான் இந்த இலக்கை நாம் எட்ட முடியும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.