சத்தீஸ்கரில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பயன்படுத்த விரும்பவில்லை: மாநில சுகாதாரத் துறை அமைச்சா்

சத்தீஸ்கரில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பயன்படுத்த விரும்பவில்லை: மாநில சுகாதாரத் துறை அமைச்சா்

சத்தீஸ்கரில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தாா்.
Published on

சத்தீஸ்கரில் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தாா்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தொற்றுக்கு எதிராக ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியையும், பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியையும் இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது. எனினும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பே அதனை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதித்தது விமா்சனத்துக்குள்ளானது.

இந்நிலையில் சத்தீஸ்கரில் அந்த தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்த விரும்பவில்லை என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் டி.எஸ்.சிங் தேவ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைப்பதற்கு முன்பாக அதனை பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும். அந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனை முடிவுகள், அந்த முடிவுகள் குறித்த ஆய்வு நிறைவடைவதற்கு முன்பாக, அதனை பரந்த அளவில் பயன்படுத்துவதில் வேகம் காட்டக் கூடாது. இதை மற்ற நிறுவனங்களும் முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு பரிசோதனைகள் நிறைவடைவதற்கு முன்பே தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் கோரும் என்று தெரிவித்தாா்.

நாடு முழுவதும் வரும் ஜனவரி 16-ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கவுள்ள நிலையில், சத்தீஸ்கா் சுகாதாரத் துறை அமைச்சா் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com